Monday, 17 June 2013

முடிவளரும் ராஜவைத்தியம்

வழுக்கை (Baldness)

வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள். அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மசாஜ் செய்துவந்தால் முடிவளரும். ராஜவைத்தியம் ஒன்றும் இருக்கிறது. ஆனைத் தந்தத்தைப் பொடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம். ஆனைத் தந்தத்தைப் பஸ்மம் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் புரட்டுவதும் உண்டு. இதற்கு ஹஸ்திதந்த மஷி என்று பெயர்.

அதிமதுரத்தைப் பொடித்து குங்குமப்பூ சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். முடி முளைத்துவிடும். இது முடி உதிர்தலையும் தவிர்க்கும். பொடுகை நீக்கும். நவீனமருத்துவத்தில் ஹைட்ரோ கார்ட்டிஸனான் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் தரப்படுகின்றன. அதிமதுரச் செடியில் கார்டிஸோனின் குணம் இருப்பதால் இவ்விளைவு ஏற்படுகிறதோ என்னவோ. ஊமத்தை விதைகள், அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத் தேங்காயெண்ணெயில் காய்ச்சி கருகும் வரைப் பயன்படுத்தவேண்டும். இந்தத் தைலமும் வழுக்கைப் பகுதிகளில் முடிவளரச் செய்கிறது. தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது. எனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். த்ரிபலா க்ஷ£ரம் என்ற மருந்துண்டு. அதாவது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை வாணலியில் போட்டு வறுத்து, நல்ல கருநிறம் அடைந்தவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கலாம்.

முடி உதிர்தல் (Hair loss)

முடி உதிர்வதைத் தடுப்பதற்கு யஷ்டிமதுலேபம் என்ற மருந்து பயன்படுகிறது. அதிமதுரம் கடையில் கிடைக்கும். இதை மென்மையான தூளாக்கிக்கொள்ளவும். ஒரு பீங்கான் தட்டில் 100 கிராம் அளவு போட்டு தினமும் 100 மிலி பால் ஊற்றி வெயிலில் வைக்கவும். முதல்நாள் ஊற்றிய பால் காய்ந்த பிறகே மறுநாள் பால் ஊற்ற வேண்டும். ஈரமிருந்தால் மீண்டும் ஒருநாள் காய வைத்தபிறகு பால் விடவேண்டும். காலை வேளைகளில்தான் பால் ஊற்றவேண்டும். இரவில் பால் ஊற்றி காயாதிருந்தால் துர்வாடை வரும். இவ்விதம் ஏழு தடவை பால் ஊற்றிக் காய்ந்த தூளை அரை லிட்டர் நீலிபிருங்காமலக தைலத்தில் குழப்பி வைத்துக்கொண்டு தினமும் மயிர்க்கால்களில் தடவித் தேய்த்துவர கேசம் உதிர்தல் நிற்கும். கேசம் நீண்டு கறுத்து வளரும். மயிர்க்கால் வெடிப்பு, பொடுகு இவை நீங்கும்.

பிருங்காமல தைலம்

நல்லெண்ணெய் 1 லிட்டர்

கரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர்

நெல்லிக்காய்ச் சாறு 1 லிட்டர்

பசுவின்பால் 4 லிட்டர்

அதிமதுரத்தூள் 60 கிராம்

கரிசலாங்கண்ணியைக் கையாந்தலை (கரியாகும் தலை) என்றும் கூறுவர். இதைக் கொண்டுவந்து அதிலுள்ள இதர புல் பூண்டுகளை அகற்ற தண்ணீ'ரில் நன்கு அலசி அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்கும் காலத்தில் அதையும் அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நல்ல நெல்லிமுள்ளியை வாங்கி விதை அகற்றிய பின் 250 கிராம் எடுத்துப் பெருந்தூளாக இடித்து 1லு லிட்டர் வென்னீரில் முதல் நாளிரவு ஊறவைத்து மறுநாள் நன்கு கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். அல்லது 1 கிலோ நெல்லி முள்ளியை (விதையுடனுள்ளது) 4 லிட்டர் தண்ணீரிலிட்டு 1 லிட்டர் மிகுதியாக கஷாயமாக்கிக்கொள்ளவும். அதிமதுரத்தை நன்கு இடித்து மெல்லிய தூளாக்கிக்கொண்டு பசுவின் பாலில் 4 மணிநேரம் வைத்து அம்மியிலிட்டு மிருதுவான கல்கமாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

நல்லெண்ணெய்யை இரும்புக் கடாயிலிட்டு நன்கு சூடேறும்வரை காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். பிறகு அதில் அதிமதுரக் கல்க்கத்தையும் சாறுகளையும் பாலையும் கிரமமாகப் போட்டுத் திரவாம்சம் சுண்டும்வரை அடி பிடிக்காமலும் கருகாமலும் கவனத்துடன் பிரட்டி விட்டுக்கொண்டு கல்க்கத்திலுள்ள ஈரம் (ஜலாம்சம்) அகன்று கல்க்கம் மொற மொற என்றானதும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.

கண், காது, மூக்கு முதலிய புலன்களை இயக்கும் நரம்புகளுக்குப் பலமும் குளிர்ச்சியும் அளிக்கக்கூடிய அப்யங்கத் தைலம், தினமும் தலைக்குத் தேய்த்து ஸ்நானம் செய்யச் சிறந்த ஸ்நான தைலம். அதிக மூளை வேலையுள்ளவர்கள் இதனால் அப்யங்கம் செய்து மூளைக் கொதிப்பு, ரத்தக் கொதிப்பு முதலிய நோய்களிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம். கேசங்கள் அடர்த்தியாகவும் அழகாகவும் கருமையுடனும் வளரும். மயிர் உதிர்தல், பொடுகு இவைகளைப்

போக்கும்.

Wednesday, 12 June 2013

The Science of Astrology: Part II


உங்கள் லக்னத்தை அறிவது எப்படி?
பொதுவாக, சூரியன் ஒருநாளில் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 12 லக்னங்களுக்கு மாறுவார். ஜாதகத்தின் ராசிக் கட்டத்தில் 'என்ற குறிப்பை வைத்து உங்கள் லக்னத்தை நீங்களே அறியலாம்.

லக்னம் மேஷம்
நீங்கள் மேஷ லக்னத்தில் பிறந்தவரா? எனில், தெய்வீக ஞானத்துடன் வல்லமை மிகுந்தவராகவும் திகழ்வீர்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபபாய் படேல், பாலகங்காதர திலகர் ஆகியோர் பிறந்ததும் இந்த லக்னத்தில்தான்.
* செவ்வாயின் திருவருளால் தீர்க்காயுள் யோகம் உண்டு. தனவந்தர் ஆகும் நிலையும், திடீர் யோகமும் வந்து சேரும்.
* புத்தி சாதுரியத்துடன் பேசும் வல்லமை பெற்றிருப்பீர்கள்.
* மகாலட்சுமியின் அருட்கடாட்சம் உங்களிடம் நிறைந்திருக்கும். தைரியசாலிகளான நீங்கள் எதிரிகளை எளிதில் வெல்லும் சூட்சுமத்தை அறிந்து வைத்திருப்பீர்கள்.
* வாழ்வின் நெளிவு சுளிவுகளைத் துல்லியமாக அறிந்தவர் நீங்கள். மற்றவருக்கு எடுத்துக்காட்டாக, உதாரண புருஷராகத் திகழும் அமைப்பு உங்களுக்கு உண்டு.
* மற்றவர்களின் மனத்தைப் புரிந்து பேசும் பண்பாளரான நீங்கள், உறவுகளால் பெரிதும் விரும்பப்படுகிறவர்களாக இருப்பீர்கள்.
* புராண- இதிகாசங்கள், சாஸ்திரக் கோட்பாடுகளிலும் பாரம்பரிய விஷயங்களிலும் நாட்டம் கொண்டிருப்பீர்கள். மேடைப்பேச்சு, விவாதங்களில் வெற்றி உங்களுக்கே!
* எவருக்கும் அடிபணிய மாட்டீர்கள். அன்புக்கு  மட்டுமே தலை வணங்குபவர் நீங்கள்.
* போஜனப் பிரியர்கள். பிறருக்கு உதவும் உத்தம குணம் கொண்டவர். அவ்வப்போது முன்கோபமும் வந்துபோகும். உண்மை, நேர்மை, நீதியுடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றியைச் சுவைப்பீர்கள்.
லக்னாதிபதி: செவ்வாய்
தெய்வம்: ஸ்ரீமகாலட்சுமி
தேவதை: ஸ்ரீதுர்கை
வஸ்திரம்: சிவப்பு வண்ண ஆடைகள்
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27. மேலும் 6, 15, 24 ஆகிய எண்களும் நலம் பயக்கும்.
அதிர்ஷ்ட ரத்தினம்: பவழம்
வழிபாடு: தினமும் வீட்டில் மண் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து, கந்த சஷ்டி கவசம் படித்து முருகப்பெருமானை வழிபடுங்கள்; நடப்பதெல்லாம் நன்மையாகவே முடியும்.

லக்னம் ரிஷபம்
அன்பு, கனிவான பேச்சு, சத்திய வாக்கு கொண்ட சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த அதிர்ஷ்டசாலிகள் நீங்கள். எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்கும் அபார திறமையும் கொண்டவர்கள்.
* தெய்வ சிந்தனை அதிகம் உண்டு. பிறரின் மனத்தைப் புரிந்து செயல்படுவீர்கள். ஸ்தூல தேகம் அமையப்பெற்றவர். குணதோஷம் அறிபவர். முக வசீகரம், கம்பீரத் தோற்றம், வேடிக்கையாகப் பேசும் திறமை கொண்டவர்.
* கலை, இலக்கியம், சினிமாத் துறையில் பிரகாசிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும். அம்பாளின் அருள்பெற்ற பாக்கியசாலிகள் நீங்கள். ஆடை-ஆபரணம், செல்வம், சொத்து-சுகம் தேடி வரும்.
* பிறரது சொத்துக்களை கிரகிப்பதில் வல்லவர். எதையும் எளிதில் உள்வாங்கிக்கொள்ளும் விஷயஞானிகள். நீண்ட ஆயுள் அமையும்.
* அயல்நாடு செல்லும் பாக்கியமும், அழகான வீடும் கிட்டும். பிற்காலத்தில் ராஜயோகம் உண்டு. புத்திரர்களால் நன்மை அடை வீர்கள். உங்களுக்கு சூரியனும் சனியும் சுபர்கள். சனி பகவான் ராஜ யோகம் தருவார். சந்திரன், குரு, சுக்ரன் பாபர்கள்.
* அரசாங்கத்தால் நன்மை ஏற்படும். பெரிய பதவிகள் கிட்டும்.  தான-தருமங்கள் செய்வதில் ஆர்வம் உண்டு. சுய திறமையால் வாழ்வை சீரமைத்துக் கொள்வதில் சமர்த்தர்கள் நீங்கள்.
லக்னாதிபதி: சுக்கிரன்
தெய்வம்: ஸ்ரீமகாலட்சுமி
தேவதை: ஸ்ரீமுருகப்பெருமான்
வஸ்திரம்: வெண்பட்டு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24, 33
வழிபாடு: வெள்ளிக்கிழமைதோறும் ஸ்ரீகாமாட்சி அம்மனைத் துதிப்பதும், தரிசிப்பதும் நலம் சேர்க்கும். அனுதினமும் ஸ்ரீஅபிராமி அந்தாதி பாராயணம் செய்துவர, உங்கள் வாழ்வில் வசந்தம் நாடிவந்து மகிழ்விக்கும்.

லக்னம் மிதுனம்

ப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நீங்கள் பிறருக்கு உதவும் நற்குணம் பெற்றவர்கள். புதனின் ஆதிக்கத்தில் பிறந்த தர்மவான்களான நீங்கள் இனிமை யாகப் பேசி, அந்தப் பேச்சுத் திறமையால் எவரையும் வெல்லும் சூட்சுமம் தெரிந்தவர்களும்கூட! பக்தி மார்க்கத் திலும் சிறந்து நிற்பீர்கள்.
உங்களின் பிற இயல்புகள்:
* கலையார்வம் அதிகம் உண்டு. எல்லாத் துறைகளிலும் பரிச்சயம் இருக்கும். எதையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் உடையவர். பல மொழிகளில் பேசும் திறமையும் கைவரப் பெற்றிருப்பீர்கள். எவரையும் பார்த்த மாத்திரத்தில் எடைபோடும் ஆற்றல் உண்டு. நடனம், கலை, எழுத்துத் துறையில் மேன்மை கிட்டும்.
* ஜோதிடம், மருத்துவம், கணினித் துறையில் வல்லுநர்களாகத் திகழ்வீர்கள். கல்வித் திறமை காரணமாக எங்கு சென்றாலும் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். சபைகளில் சளைக்காமல் பேசுவீர்கள். நிறைய நண்பர்கள் அமைவர். நகைச்சுவை நாயகனாக இருப்பீர்கள். போஜனப் பிரியமற்ற நீங்கள், உணவில் கட்டுப்பாடுடன் வாழ்வீர்கள்.
* விருந்து, உபசாரம் செய்வது மிகவும் பிடிக்கும். வாசனைத் திரவியங்களில் அதிக மோகம் கொண்டிருப்பீர்கள். பெற்றோரை போஷிப்பீர்கள். தான, தருமம் செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே! பரந்த மனம் உடையவர் நீங்கள். வசீகரமும் அழகும் மிக்கவர்.
* இருப்பினும், சுயநலக்காரியவாதிகளான நீங்கள் சிரித்துப் பேசிக் காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். தந்திரமும் சூட்சுமமும் அறிந்தவர்கள். சுய உழைப்பினால் உயர்ந்து நிற்பவர்கள். அழுத்தமான மனம் பெற்ற நீங்கள் பிறரிடம் ரகசியம் வெளியிட விரும்பமாட்டீர்கள். 30 வயதுக்குப் பிறகு ராஜயோகம் படிப்படியாய் மலரும்.
லக்னாதிபதி: புதன்
தெய்வம்: மகாவிஷ்ணு
தேவதை: பிரம்மா, துர்கை
வஸ்திரம்: பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23, 32
வழிபாடு: ஸ்ரீமகாவிஷ்ணுவின் பூரண அனுகிரகத்தைப் பெற, நீங்கள் தினமும் ஸ்ரீவிஷ்ணுவின் ஆலயம் சென்று வழிபடுங்கள்; அனைத்தும் நலமாகும்.

லக்னம் கடகம்
ப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தரும் நீங்கள் பிறருக்கு உதவும் நல்லெண்ணம் கொண்டவர்கள்; முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள். அதோடு, சாதனையின் நாயகனாகத் திகழ்வீர்கள். ராமாயண நாயகன் ஸ்ரீராமபிரான், நாடே புகழ்ந்து போற்றும் ஸ்ரீஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பிறந்தது இந்த லக்னத்தில்தான்!
உங்களின் பிற குணங்கள்:
* சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவரான நீங்கள் வார்த்தை ஜாலம் கொண்டவர்கள். பேச்சில் எவரையும் வெல்பவர்கள். தீர்க்காயுள் உண்டு. ஆரம்ப காலம் சுமாராகவும், 40 வயதுக்குப் பிறகு மகாஜனயோகம், கோடீஸ்வரராகும் யோகம் ஸித்திக்கும்.
* எப்போதும் தெய்வ அனுக்கிரகம் உடன் வரும். அன்புக்கு மட்டுமே அடிபணிவீர்கள். அதிகாரம் என்பதே கூடாது என்பீர்கள். நண்பர்கள் அதிகம் உண்டு. தெய்வீக வழிபாடுகளில் அதிக ஈடுபாடு இருக்கும்.
* தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். கல்வியிலும் திறமைசாலிகள்தான். கற்பனைத் திறன் அதிகம் உண்டு. நீதி, நேர்மை, உண்மையில் நம்பிக்கை கொண்டவர் நீங்கள். பண விஷயங்களில்
கண்டிப்பானவர்.
லக்னாதிபதி: சந்திரன்
தெய்வம்: முருகன்
அதிதேவதை: பார்வதி
வஸ்திரம்: வெண்மை
அதிர்ஷ்ட எண்கள்: முக்கியமாக 2, 11, 20. மற்றும் 9, 18, 27 ஆகிய எண்களும் நலம் பயக்கும்.
வழிபாடு: திங்கட்கிழமைதோறும் சிவாலயம் சென்று தரிசிப்பதும், சிவபுராணத்தை பக்தியுடன் பாராயணம் செய்வதும் நல்லது. அப்படிச் செய்து வந்தால், மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்கி சந்தோஷமான வாழ்வுக்கு வழி பிறக்கும்.
பொதுப் பலன்: மூன்றாம் பிறை தரிசனம் வாழ்வில் முன்னேற்றம் தரும். திருப்பதி திருமலையப்பன் தரிசனமும் நல்லது.


லக்னம் சிம்மம்
தோல்வி கண்டு துவளாமல், வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று செயல்பட்டு வாழ்வில் ஜெயிப்பவர் நீங்கள். எடுத்த காரியங்கள் எதிலும் தடைகள் ஏற்படாது.
உங்களின் பிற இயல்புகள்:
சூரியனின் ஆதிக்கத்தில் மிகவும் பிரகாசமாக வலம் வரும் யோகம் கொண்டவர் நீங்கள். எப்போதும் ஒரு கொள்கையுடன் செயலாற்றுவீர்கள்.
 தனவரவு சரளமாக வந்துசேரும் பாக்கியம் உண்டு. உடன்பிறந்தோரிடம் பிரியம் அதிகம். சுய உழைப்பால் வாழ்வில் உயர்வு காண்பீர்கள். தலைமைப் பதவி தேடிவரும். அதிகாரத் தோரணை அதிகம் உண்டு உங்களிடம்.
 நண்பர்கள் மத்தியில் போற்றப்படுவீர்கள். பிறரது வளர்ச்சி கண்டு சந்தோஷப்படும் அன்பர் நீங்கள். ஆலய வழிபாடுகளில் ஆர்வம் உண்டு. பட்டங்கள், பதவிகள், பரிசுகள் வாங்கிக் குவிப்பீர்கள்.
போஜனப்பிரியர்கள். அவ்வப்போது முன்கோபம் வரும். மிகவும் கண்டிப்பானவர்களும்கூட!
 விருந்து, கேளிக்கைகள் என சுப நிகழ்வுகளில் அடிக்கடி கலந்துகொள்வீர்கள். குடும்பத்தாரின் அன்பைப் பெறுவீர்கள். எப்போதும் ஆள், அதிகாரம், தொண்டர்கள் உங்களுக்கு உண்டு. மற்றவர் செய்யும்  குற்றங்களை எளிதில் கண்டுபிடிப்பதில் மகா கெட்டிக்காரர்கள் நீங்கள்.
லக்னாதிபதி: சூரியன்
தெய்வம்: ஸ்ரீபார்வதிதேவி
தேவதை: ஸ்ரீசிவபெருமான்
வஸ்திரம்: சிவப்பு நிற ஆடைகள்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19 மேலும் 9, 18, 27.

வழிபாடு: பிரதி ஞாயிற்றுக்கிழமைதோறும் சூரிய வழிபாடும் நவக்கிரக துதிகள் பாராயணமும் செய்வது நலம் சேர்க்கும். அத்துடன், மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு தானம் அளிப்பதும் சிறப்பு. அதன் பலனாக வாழ்வில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். இயன்றால் ஒருமுறை சென்னை- மயிலாப்பூரில் கோயில் கொண்டருளும் அருள்மிகு கபாலீஸ்வரர்- கற்பகாம்பாளைத் தரிசித்து வாருங்கள்.

Tuesday, 4 June 2013

Go green, Go Herbal - Shree Sathuragiri Herbals ஸ்ரீசதுரகிரி ஹெர்பல்ஸ்

மூலிகைகள் இயற்கை நமக்கு அளித்த மிகப்பெரிய கொடை!

சித்தர்கள்உலகிற்கு அளித்த , பக்க விளைவுகள் இல்லாத வைத்திய வரம் மூலிகை மருத்துவம்!

மூலிகைகளை பயன்படுத்தி,உடல் நலம் பேணுவோம்!


சதுரகிரி ஹெர்பல்ஸ்


To know more details about the importance of HERBS and HERBAL MEDICINE please visit the following Blogspot!