Monday, 15 December 2014

அழகிய கூந்தலுக்கான அதிசயம் கேள்

அழகிய கூந்தலுக்கான அதிசயம் கேள், கடுக்காய் பருப்பு ,மிளகு மஞ்சள், நெல்லி முள்ளி, வேப்பங்கொட்டை ஆகிவற்றை ஒவ்வொரு களஞ்சி அளவு சேகரித்து அதில் அளவாக பசும்பால் விட்டு நன்கரைத்து, அதனை தலையில் பூசி 10 நிமிடம் ஊறவைத்து தலை முழுக வேண்டும் இதனால் உடல் பொலிவடையும், இம்முறையில் தொடர்ந்து தலை முழுகிவந்தால் கபாலம் உறுதி பெறுவதுடன், கரு வண்டு போல கரிய நிற கூந்தல் கிடைக்கும், அத்துடன் வாய்வு நோய்களும், தலைவலி போன்றவையும் அண்டாது

Wednesday, 23 July 2014

Sai Jewels n Choices

Handmade Jewelry that suits the princess in you!!!! Orders undertaken. please check the following link for more models.

https://www.facebook.com/pages/Sai-Jewelz-n-Choices/468717663264440?sk=info 












Sunday, 22 September 2013

சித்தர்களின் குறியீட்டு மொழிநடைக்குக் காரணங்கள்

1. தீட்சை பெறாதவர்கள் மேலோட்டப் பொருளோடு நிறைவடைந்து நின்றுவிடுமாறு செய்தல்.

2. எளிய நாட்டுப்புற வழக்கு மொழியில் எழுதுவதன் மூலம் பொதுமக்கள் நாவில் அதை வழங்குமாறு செய்தல். இவ்வாறாக அந்தப் பாடல் தலைமுறை தலைமுறையாகச் சிதைவின்றிச் சென்று சேர்வதற்கு வழி கோலுதல். பாடலைத் தோண்டுகிறவர்களுக்கு அதன் உட்பொருள் திறந்து கொள்ள வகை செய்தல்.

3. வைதீகர்கள் பாடல்களைச் சிதைத்துவிடாதபடி, அதற்குள் உருப்படியான பொருள் ஏதுமில்லாதது போல் தோற்றம் காட்டி அவர்களை ஏமாற்றுதல்.

4. யோகியைப்  பயிற்றுவிக்குமுகமாக அவனைப் பல புதிர்களுக்கும் முரண்களுக்கும் உள்ளக்கி அவனை தயார் படுத்துவாது.


5. முக்கியமான சிலவற்றை நினைவில் வைத்துக்கொள்ளப் பொருளற்ற சொல் ஒன்றை உருவாக்கிக் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக "டாடாடாடாடாடா தோட்டத்தில் 555555 பறிப்பது? டாடா வருகிறேன்' என்று நம்முடைய சிறுவர்கள் விளையாடிக் கொள்வதைச் சொல்லலாம். இதன் பொருள் "ஆறுடா (ஆரடா) தோட்டத்தில் ஆறஞ்சு (ஆரஞ்சு) பறிப்பது? இருடா வருகிறேன்" என்பதாகும். இதைப்போலவே சித்தர்களும் தாங்கள் சொல்லவந்த செய்தியை பொருளற்ற சொற்களுக்குள் புதைத்து வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டாக ஒரு சித்த வைத்தியப் பாடலில் இருகுரங்கை என்றொரு சொல்லைச் சித்தர் பயன்படுத்துகிறார். குரங்குக்கு முசு என்று ஒரு பெயர் உண்டு. இரு குரங்கு என்றால் முசுமுசு. இருகுரங்குக்கை என்பது முசுமுசுக்கை என்ற மூலிகை.   

Wednesday, 11 September 2013

மனித உடல் பற்றிய சித்தர்களின் கருத்து

பானை நிறைய தயிர் இருக்கும் போது வெண்ணைக்கு அலையும் அறிவிலிகள் போல, மனிதர்கள் தம்முள் இறைவன் நிற்பதை அறியாமல் அலைகிறார்கள் என்றும், உடம்பு என்கிற உருவரங்கமே இறைவனின் திருவரங்கம்; ஒவ்வொரு மனித உடம்பினிக்குள்ளும் ஒரு மாணிக்கம் பொதிந்து கிடக்கின்றது. தமிழ் சித்தர்கள் உடம்பை வாசல் என்கிறார்கள். கரையில் முட்டையிட்டுவிட்டு கடலுக்குள் செல்லும் ஆமை கடலுக்குள் எப்போதும் தான் இட்ட முட்டைகளைப் பற்றியே நினைக்கும். அந்த நினைப்பு காரணமாகவே அந்த முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவருகின்றன. அதுபோல மனிதன் இந்த உடம்பை கடவுள் வாழும் ஆலயமாக நினைத்தால் அது மெய்யாகவே கடவுள் வாழும் ஆலயமாக மாறும் என்பது சித்தர்களின் கருத்து. 
புலனை அடக்கத் தெரியதவனுக்கு யோகப் பயிற்சியினால் பயன் ஏதும் இல்லை என்கிறார் சிவவாக்கியர். உடம்பு ஒரு சிறை என்றும் அதிலிருந்து ஆன்மாவை மீட்க வேண்டும் என்று பேசிய நிலைக்கு மாறாக சித்தர்கள் உடம்பின் வழியாகவே ஆன்மாவை கடைத்தேற்ற முடியும் என்று கூறுகிறார்கள். 

Monday, 9 September 2013

சித்தவியல் - சித்தர்களின் சமூக நோக்கு - விலகிப் போவதா? ஒட்டி வாழ்வதா?

உலகத்தையும் அதன் நலன்களையும் மறுதலித்து விட்டுப் பெறுவதுதான்  மெய்யுணர்வு  என்று கருதுவது பிழையானது என்பது சித்தர்களின் கருத்து. சமூகத்தை விட்டுவிலகுவதும் அதனைத்துறந்து வெளியேறுவதுமானதுறவு சித்தர்களுக்குச் சம்மதமன்று. ஆன்மீக ஈடுபாடு என்பது சாதாரண மனிதனின் சிக்கல்களுக்குப் பாராமுகம் காட்டுவதாகாது. சித்தர்களின் ஆன்மீகம் சமூகத்திலிருந்தும் அதன் நிறுவனங்களிலிருந்தும் வெளியேறுவதன்று; அதுமானுடத்தோடு ஒட்டிவாழ்வது. சித்தர்கள் உலகத்தலிருந்து தனிமைப் படுத்திக்கொள்ள மாட்டார்கள், உலக நிகழ்வுகளில் ஈடுபாடு கொண்டால்அந்த ஈடுபாடு படைப்பாக்க ஆற்றலை ஒருங்குபடுதித்திக்கொள்ள உதவும்.

Thursday, 5 September 2013

Foothills of Western Ghats

 Woods are lovely dark and deep. But, I have promises to keep and miles to go before I sleep and miles to go before I Sleep
-Robert Frost