பானை நிறைய தயிர் இருக்கும் போது வெண்ணைக்கு அலையும் அறிவிலிகள் போல, மனிதர்கள் தம்முள் இறைவன் நிற்பதை அறியாமல் அலைகிறார்கள் என்றும், உடம்பு என்கிற உருவரங்கமே இறைவனின் திருவரங்கம்; ஒவ்வொரு மனித உடம்பினிக்குள்ளும் ஒரு மாணிக்கம் பொதிந்து கிடக்கின்றது. தமிழ் சித்தர்கள் உடம்பை வாசல் என்கிறார்கள். கரையில் முட்டையிட்டுவிட்டு கடலுக்குள் செல்லும் ஆமை கடலுக்குள் எப்போதும் தான் இட்ட முட்டைகளைப் பற்றியே நினைக்கும். அந்த நினைப்பு காரணமாகவே அந்த முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவருகின்றன. அதுபோல மனிதன் இந்த உடம்பை கடவுள் வாழும் ஆலயமாக நினைத்தால் அது மெய்யாகவே கடவுள் வாழும் ஆலயமாக மாறும் என்பது சித்தர்களின் கருத்து.
புலனை அடக்கத் தெரியதவனுக்கு யோகப் பயிற்சியினால் பயன் ஏதும் இல்லை என்கிறார் சிவவாக்கியர். உடம்பு ஒரு சிறை என்றும் அதிலிருந்து ஆன்மாவை மீட்க வேண்டும் என்று பேசிய நிலைக்கு மாறாக சித்தர்கள் உடம்பின் வழியாகவே ஆன்மாவை கடைத்தேற்ற முடியும் என்று கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment