Wednesday 20 March 2013

சோதிடக் கலையைப் பற்றிய ஒரு தவறான கருத்து


சோதிடம் என்பது ஒரு மனிதனுடைய தவிர்க்க முடியாத எதிர்காலத்தை  எடுத்துக்காட்டுகிற கலை என்று பலர் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். சோதிடத்தையே தம் தொழிலாகக் கொண்ட பெருமக்களும் இக்கருத்தை பரப்பி வருகிறார்கள். 'உன் ஜாதகத்தில் இப்படித்தான் இருக்கிறது. ஆகையால் நீ தலைகீழாக நின்றாலும் அதை மாற்றிவிட முடியாது' என்ற பாணியில் பல சோதிடர்கள் பேசுவதை நாம் கேட்டு இருக்கிறோம். இந்தக் கருத்தில் ஓர் அடிப்படைத் தவறு இருக்கிறது.

ஒருவர் எவ்வளவு பெரிய சோதிடராக இருந்தாலும், ஒரு மனிதனுடைய எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று அவரால் வரையறுத்து கூறிவிட முடியாது. ஒரு மனிதனுடைய எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று திட்டவட்டமாகத தெரிந்து வைத்து இருப்பவர், ஒரே ஒருவர்தான் உண்டு. அவர்தான் இறைவன்.     

No comments:

Post a Comment