Sunday 22 September 2013

சித்தர்களின் குறியீட்டு மொழிநடைக்குக் காரணங்கள்

1. தீட்சை பெறாதவர்கள் மேலோட்டப் பொருளோடு நிறைவடைந்து நின்றுவிடுமாறு செய்தல்.

2. எளிய நாட்டுப்புற வழக்கு மொழியில் எழுதுவதன் மூலம் பொதுமக்கள் நாவில் அதை வழங்குமாறு செய்தல். இவ்வாறாக அந்தப் பாடல் தலைமுறை தலைமுறையாகச் சிதைவின்றிச் சென்று சேர்வதற்கு வழி கோலுதல். பாடலைத் தோண்டுகிறவர்களுக்கு அதன் உட்பொருள் திறந்து கொள்ள வகை செய்தல்.

3. வைதீகர்கள் பாடல்களைச் சிதைத்துவிடாதபடி, அதற்குள் உருப்படியான பொருள் ஏதுமில்லாதது போல் தோற்றம் காட்டி அவர்களை ஏமாற்றுதல்.

4. யோகியைப்  பயிற்றுவிக்குமுகமாக அவனைப் பல புதிர்களுக்கும் முரண்களுக்கும் உள்ளக்கி அவனை தயார் படுத்துவாது.


5. முக்கியமான சிலவற்றை நினைவில் வைத்துக்கொள்ளப் பொருளற்ற சொல் ஒன்றை உருவாக்கிக் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக "டாடாடாடாடாடா தோட்டத்தில் 555555 பறிப்பது? டாடா வருகிறேன்' என்று நம்முடைய சிறுவர்கள் விளையாடிக் கொள்வதைச் சொல்லலாம். இதன் பொருள் "ஆறுடா (ஆரடா) தோட்டத்தில் ஆறஞ்சு (ஆரஞ்சு) பறிப்பது? இருடா வருகிறேன்" என்பதாகும். இதைப்போலவே சித்தர்களும் தாங்கள் சொல்லவந்த செய்தியை பொருளற்ற சொற்களுக்குள் புதைத்து வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டாக ஒரு சித்த வைத்தியப் பாடலில் இருகுரங்கை என்றொரு சொல்லைச் சித்தர் பயன்படுத்துகிறார். குரங்குக்கு முசு என்று ஒரு பெயர் உண்டு. இரு குரங்கு என்றால் முசுமுசு. இருகுரங்குக்கை என்பது முசுமுசுக்கை என்ற மூலிகை.   

No comments:

Post a Comment