Friday, 12 April 2013

கடல்



அழகாய் ஆத்திரமாய் 
வாழ்க்கைத் தத்துவம் ஓதுகிறாய் 
நொடிக்கொருமுறை கரைதனில் விடும் சேதி என்னவோ ?
பாசைகளின் பரிணாமம் 
முடிவுரவில்லை போலும்!

பிரபஞ்சத்தின் விஸ்தரிப்பு 
 உன்னுள் சங்கமிப்பதாய் உணர்வு 
 பௌதீகம்  பொய்யாகிப் போகுமோ ?

கிளிஞ்சல்கள்  தடம் பதித்து திரும்புகையில் 
அலைகள்  ஏனோ அவேசமடைகின்றன 
சுவடுகளை அழித்துவிட்டு 
கருவறையையும் கல்லறையையும் 
சுமக்கிறது அமைதியாக !

தேடலின் அசதியில் 
நதிகள் இளைப்பாற 
நித்திரையில் நீந்தும் முத்துக்களோ 
பாதை சொல்லுமோ?

ஆயிரம் வினாக்களுடன் காத்திருக்கிறேன் 
தொடுவானில் சந்திக்கும் வரை.................




No comments:

Post a Comment