விளக்கெண்ணை, ஆலிவ் ஆயில் இரண்டுமே இதற்கு உதவும். இரண்டு எண்ணையையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு பட் (bud ) வைத்து எடுத்து புருவத்தின் மேலும் கண் இமைகளின் மீதும் தடவவேண்டும். பிறகு ஒரு பஞ்சினால் அந்த எண்ணைகளைத் தொட்டு கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு அப்படியே கண்களை மூடி 10 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் கண்கள் பிரகாசமாகும்.
உருளைக் கிழங்கைத் துருவி அரைத்து சாறு எடுக்கவும். வெள்ளரி விதை சிறிதளவு அரைத்து வடிகட்டிச் சாறை எடுக்கவும். இவற்றை கலந்து பிரிட்ஜில் வைக்கவும். பின்னர் பஞ்சில் அச்சாறை நனைத்து கண்கள் மேல் வைக்கவும். அப்படியே கண்களை மூடி 10 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் கண்கள் பிரகாசமாகும்.
No comments:
Post a Comment