Wednesday, 20 March 2013

சோதிடக் கலையைப் பற்றிய ஒரு தவறான கருத்து


சோதிடம் என்பது ஒரு மனிதனுடைய தவிர்க்க முடியாத எதிர்காலத்தை  எடுத்துக்காட்டுகிற கலை என்று பலர் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். சோதிடத்தையே தம் தொழிலாகக் கொண்ட பெருமக்களும் இக்கருத்தை பரப்பி வருகிறார்கள். 'உன் ஜாதகத்தில் இப்படித்தான் இருக்கிறது. ஆகையால் நீ தலைகீழாக நின்றாலும் அதை மாற்றிவிட முடியாது' என்ற பாணியில் பல சோதிடர்கள் பேசுவதை நாம் கேட்டு இருக்கிறோம். இந்தக் கருத்தில் ஓர் அடிப்படைத் தவறு இருக்கிறது.

ஒருவர் எவ்வளவு பெரிய சோதிடராக இருந்தாலும், ஒரு மனிதனுடைய எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று அவரால் வரையறுத்து கூறிவிட முடியாது. ஒரு மனிதனுடைய எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று திட்டவட்டமாகத தெரிந்து வைத்து இருப்பவர், ஒரே ஒருவர்தான் உண்டு. அவர்தான் இறைவன்.     

பிராணாயாமம்




பறவையை விட வேகம் கொண்டது பிராணன். அதன் வழி சிரசை நோக்கிச் செல்வதாயின் கள் உண்ணாமலே சாதகனுக்கு மகிழ்ச்சி உண்டாகும் என்கிறார் திருமூலர். பிராணாயாமப் பயிற்சியில் சாதகன் சோம்பல் நீங்கி, சுறுசுறுப்பை அடைகிறான்.

பிராணாயாமம் என்பது வெளியே இருக்கும் காற்றை இடது மூக்கு துவாரத்தின் வழியாக உள்ளே இழுத்துக்கொண்டு பதினாறு மாத்திரை கால அளவு சுழிமுனை நடுவில் அதாவது நடு மூச்சில் நிறுத்தி, பிறகு முப்பத்தி இரண்டு மாத்திரை அளவு வலது மூக்கின் துவாரத்தின் வழியே விடுவதாகும்.

பிராணாயாமம் செய்யும் முறைபற்றி திருமூலரின் திருமந்திரம் இப்படிக் கூறுகிறது:

'ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் 
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில் 
ஊறுதல் முப்பத்திரண்டதிரெசகம் 
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமாமே'

Funny Stories - நெட்டில் சுட்டது


The child and his mother.
A curious child asked his mother: “Mommy, why are some of your hairs turning grey?”
The mother tried to use this occasion to teach her child: “It is because of you, dear. Every bad action of yours will turn one of my hairs grey!”
The child replied innocently: “Now I know why grandmother has only grey hairs on her head.”
The College Rules.
There is a teacher speaking in front of a group of boy college freshmen about the college rules. The teacher starts talking about the dorm rooms. “If you get caught in a girls dorm room after nine o’clock, you will get a fifty dollar fine. If you get caught twice, you get a hundred dollar fine. If you get caught three times, you get a two hundred-fifty dollar fine and suspension for a week at the least.” So a boy raises his hand and asks, “How much for a yearly pass?”
Why did you have to die?
A man was at a grave yard.
He began to moan “Why did you die oh why did you have to die?”
A passer by knelt down next to the man and said “Was this person very close to you?”
“No, actually i never met him!” replied the man
“Why are you moaning then?” asked the passer-by contiguously.
“He was my wife’s first husband!” 

Friday, 15 March 2013

மலர்வதியின் தூப்புக்காரி




வாவென்றால் வசந்தம் வராது
 தேடி நின்றால் வாழ்வு வசப்படாது 
வருந்தி சோர்ந்தால் காலம் கைவராது 
வாழ்க்கை வசப்பட அழுகை ஆயுதம் அல்ல 
போதும் அழுகை .....
புறப்படு........உனக்குரிய வாழ்வை மீட்டெடுக்க .......
                                                               - மலர்வதி 

பூமி மடியை சுத்தப்படுத்தும் உயர்ந்த மனிதர்களுக்கு இப்புதினத்தை காணிக்கையாக்கி  இருக்கிறார் மலர்வதி. சமூக அக்கறை உள்ள இளம் எழுத்தாளர் அதுவும் அவலங்களுக்கு இடையே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து  வரும் எழுத்தாளர் கிடைத்தது தமிழுக்கும் சமூகத்திற்கும் கிடைத்த பெருமை. அவரது எழுத்தில் பெண்ணியமும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின்மேல் உள்ள மதிப்பும் தெரிகிறது.பெண்ணின் ஆற்றல், அவளது திறமை, சமூக ஈடுபாடு அத்தனையும் உடம்போடு முடக்கிப் போடப் பட்டுள்ளதால், வித்தியாச ஆற்றல் வாதிகளை அழுக்கு வார்த்தையால்  அவமானப்படுத்தி ஆனந்தப் படுகிறது பொல்லாத சமூகம்.
அசுத்தப் படுத்துகிறவனுக்கு அழுக்கின் கொடூரம் தெரியாது. அனால் அதை அள்ளுகிறவன் மட்டும் சாதியில் குறைந்தவன் என தள்ளி வைக்க முடிகிறது. ஈக்களிலும், புழுக்களிலும், நாற்றத்திலும் உழைத்து வாழ்வு ஆதாரம் தேடுபவர்களுக்கு இச்சமூகத்தின்  அவலம் மட்டும் மிஞ்சுகிறது . மலர்வதியின் எழுத்துக்களை வாசிக்கையில்  வாழ்க்கையை வலியால் மீட்டிய  வேதனையை உணர முடிகிறது .
 மலர்வதியின் தூப்புக்காரியை வாசிப்போம் சிலர் நினைவலைகளை மாற்றுவோம். 

Wednesday, 13 March 2013

பத்தில் குரு


பத்துக்குடைய கருமாதிபதி அவனுக்குப் பத்தாம் இடமான கருமஸ்தானத்தில் அமர அல்லது 2 ஆம் இடமான தனஸ்தானத்தையோ 11 ஆம் ஸ்தானமான லாபத்தையோ அடைய அச்சாதகன் உத்தமனாய் மிகவும் நிதியுடையவனாய் நற்கருமம் செய்பவனாய் மங்களகரமான யாகங்கள் பலவும் புரிந்து இத்தரணியில் வெகு கிராமங்களை உண்டுபண்ணி விளக்கமுற வாழ்ந்திடுவான்.

விளக்கம் பெற்ற சந்திரனுக்கு ஈரைந்து எனக் கூறப்படும் பத்தாமிடத்தில் குரு நிற்க அக்குமரனுக்கு யோகம் மிகவும் உண்டு. அவன் அரண்மனையில் அரசனுக்கு உகந்த சேனாதிபதியாக இருப்பான்.  

Tuesday, 12 March 2013

இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு



அமுக்கிரகிழங்கு தோல் நீக்கி துண்டுகளாக்கி பசும் பாலின் ஆவியில் வேகவைக்க வேண்டும். பின்பு எடுத்து உலர்த்தி பொடி பண்ண வேண்டும். தினமும் காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சிறிது தேன் கலந்து (1 ஸ்பூன் பவுடர்) சாப்பிட வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

வெள்ளை தாமரை பூவின் இதழை எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும் 1/2 டம்ளர் வரவேண்டும். பின்பு அதில் பனங்கற்கண்டு போட்டு காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

 செம்பருத்தி பூவையும் (10-11 பூக்கள்) மேற்கண்ட முறைப்படி செய்து குடித்துவர இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.