Friday, 15 March 2013

மலர்வதியின் தூப்புக்காரி




வாவென்றால் வசந்தம் வராது
 தேடி நின்றால் வாழ்வு வசப்படாது 
வருந்தி சோர்ந்தால் காலம் கைவராது 
வாழ்க்கை வசப்பட அழுகை ஆயுதம் அல்ல 
போதும் அழுகை .....
புறப்படு........உனக்குரிய வாழ்வை மீட்டெடுக்க .......
                                                               - மலர்வதி 

பூமி மடியை சுத்தப்படுத்தும் உயர்ந்த மனிதர்களுக்கு இப்புதினத்தை காணிக்கையாக்கி  இருக்கிறார் மலர்வதி. சமூக அக்கறை உள்ள இளம் எழுத்தாளர் அதுவும் அவலங்களுக்கு இடையே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து  வரும் எழுத்தாளர் கிடைத்தது தமிழுக்கும் சமூகத்திற்கும் கிடைத்த பெருமை. அவரது எழுத்தில் பெண்ணியமும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின்மேல் உள்ள மதிப்பும் தெரிகிறது.பெண்ணின் ஆற்றல், அவளது திறமை, சமூக ஈடுபாடு அத்தனையும் உடம்போடு முடக்கிப் போடப் பட்டுள்ளதால், வித்தியாச ஆற்றல் வாதிகளை அழுக்கு வார்த்தையால்  அவமானப்படுத்தி ஆனந்தப் படுகிறது பொல்லாத சமூகம்.
அசுத்தப் படுத்துகிறவனுக்கு அழுக்கின் கொடூரம் தெரியாது. அனால் அதை அள்ளுகிறவன் மட்டும் சாதியில் குறைந்தவன் என தள்ளி வைக்க முடிகிறது. ஈக்களிலும், புழுக்களிலும், நாற்றத்திலும் உழைத்து வாழ்வு ஆதாரம் தேடுபவர்களுக்கு இச்சமூகத்தின்  அவலம் மட்டும் மிஞ்சுகிறது . மலர்வதியின் எழுத்துக்களை வாசிக்கையில்  வாழ்க்கையை வலியால் மீட்டிய  வேதனையை உணர முடிகிறது .
 மலர்வதியின் தூப்புக்காரியை வாசிப்போம் சிலர் நினைவலைகளை மாற்றுவோம். 

No comments:

Post a Comment