பறவையை விட வேகம் கொண்டது பிராணன். அதன் வழி சிரசை நோக்கிச் செல்வதாயின் கள் உண்ணாமலே சாதகனுக்கு மகிழ்ச்சி உண்டாகும் என்கிறார் திருமூலர். பிராணாயாமப் பயிற்சியில் சாதகன் சோம்பல் நீங்கி, சுறுசுறுப்பை அடைகிறான்.
பிராணாயாமம் என்பது வெளியே இருக்கும் காற்றை இடது மூக்கு துவாரத்தின் வழியாக உள்ளே இழுத்துக்கொண்டு பதினாறு மாத்திரை கால அளவு சுழிமுனை நடுவில் அதாவது நடு மூச்சில் நிறுத்தி, பிறகு முப்பத்தி இரண்டு மாத்திரை அளவு வலது மூக்கின் துவாரத்தின் வழியே விடுவதாகும்.
பிராணாயாமம் செய்யும் முறைபற்றி திருமூலரின் திருமந்திரம் இப்படிக் கூறுகிறது:
'ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதிரெசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமாமே'
No comments:
Post a Comment