பத்துக்குடைய கருமாதிபதி அவனுக்குப் பத்தாம் இடமான கருமஸ்தானத்தில் அமர அல்லது 2 ஆம் இடமான தனஸ்தானத்தையோ 11 ஆம் ஸ்தானமான லாபத்தையோ அடைய அச்சாதகன் உத்தமனாய் மிகவும் நிதியுடையவனாய் நற்கருமம் செய்பவனாய் மங்களகரமான யாகங்கள் பலவும் புரிந்து இத்தரணியில் வெகு கிராமங்களை உண்டுபண்ணி விளக்கமுற வாழ்ந்திடுவான்.
விளக்கம் பெற்ற சந்திரனுக்கு ஈரைந்து எனக் கூறப்படும் பத்தாமிடத்தில் குரு நிற்க அக்குமரனுக்கு யோகம் மிகவும் உண்டு. அவன் அரண்மனையில் அரசனுக்கு உகந்த சேனாதிபதியாக இருப்பான்.
No comments:
Post a Comment