Thursday, 21 February 2013

தாய் மொழி தமிழ் இனம்


கலாச்சார சீர்கேடுகளின் நடுவே மனசாட்சியை சாந்தப் படுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று - இன்று தாய் மொழி தினம். கொஞ்சம் பயமாக இருக்கிறது-- இன்றும் தூய தமிழ் மொழி பேசும் தமிழ் இனத்தை நினைவு கூற நாட்காட்டியில் இன்னும் ஒரு நாள்  குறிக்கப்பட்டுவிடுமோ என்று. வாழ்வியல் முறைகளை சொல்லிக்கொடுத்த பெருமை என்றும் தமிழ் மொழிக்கு உண்டு. ஆனால் இன்று அம்மொழி பேசும் இனத்தாரை அழிக்க ஓர் அரசாங்கமே செயல்பட்டு வருகின்றது மாற்றான் காட்டும் பரிவும் இரக்கமும் முனைப்பும் நம்மில் இல்லாமல் போனது ஏனோ மனதை நெருடுகிறது கொஞ்சகாலமாய்.  இன்னும் எத்தனை கோப்புக் காட்சிகள் தொலைகாட்சியில் அரங்கேறினாலும் நாம் நம்  வேலைகளை தொடர்வோம் வழக்கம் போல்இயந்தரமாக்கப்பட்ட இவ்வுலகில். ஆனால்  எம்தமிழ் இதனை போதித்தது இல்லையே?  என்ன செய்ய  அறம் கூறின தமிழ் இன்று மௌனமாய் இருக்கின்றது கூக்கரிச்சான்  குருவிகளின் கூக்குரலில்.   மௌனம் களைவோம் ...................... 

Tuesday, 19 February 2013

விஸ்வரூபம் கமல் - ஓர் அலசல்


 ஆங்கில மோகத்தோடு   பார்பன வாடையுடன் தொடங்குகிறது திரைக்கதை. சிக்கன் சாப்பிடும் பாப்பாதிகளை நையாண்டி செய்யும் கமல் அறிமுக பாடலில் கலக்குகிறார் கதக்குடன். மற்றும் ஒருமுறை  நாயகியுடன் கதக் ஆடுவார் என்ற எதிர்பார்ப்போடு ஏமாற்றத்துடன் முடிகிறது திரைப்படமும். விஸ்வநாதன் கதாபாத்திரத்தில் இருந்த கமலின் நடிப்பு ஏனோ காஷ்மீரியில் வெளிப்படவில்லை.  படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று லாஜிக் கேள்விகள் தோன்றும் வேளையில் நம்மை அதிகம் சிந்திக்க விடாமல் அடுத்த கட்டத்தை விறுவிறுப்புடன் நகர்த்துவது தான். சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் அனுபவத்தை தருகின்றன. ஹை டெக் கமலின் மற்றுமொறு பரிமாணம். வாழ்த்துக்கள் தோழரே. ஒரு வேளை பாமர ஜனங்களை கருத்தில் கொண்டு  படம்  எடுத்திருந்தால் விஜயகாந்தை கதா நாயகனாகப் போட்டிருப்பாரோ கமல்? 

உங்களின் சமூக அக்கறைக்கு எங்களது வணக்கங்கள் . ஆனால் வறுமையின் நிறம் சிகப்பு, அன்பே சிவம் போன்ற கமலின் திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விஸ்வரூபத்தின் பிரமாண்டம் ஏற்படுத்தவில்லை. 

நல்லதோர் வீணை செய்தே - அதை 
     நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ? 
சொல்லடி, சிவசக்தி !~ எனைச் 
     சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.

Kamal Sir, it is the right time for introspection rather than entering into controversy……. உங்களிடம் உள்ள எதிர்பார்ப்பு இன்னமும் குறையவில்லை.............. தொடருங்கள்  ............

எளிமையே கடினம்

  
உனக்குள் மிகவும் ஏழ்மையான பிச்சை எடுப்பவனும் இருக்கிறான். முரடனும் இருந்து கொண்டு அழிவை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறான். உரிய மனவலிமையுடனும், கருணையுடனும் தன்னைத்தானே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளதா என்ற கேள்வியை நம்மை நோக்கி எழுப்புகிறார் உளவியல் வல்லுனர். இது மனித குலத்தின் நேர்மை உணர்வு சார்ந்த சவால்களின் சாரம் என்றும் கூறுகிறார். உங்களுக்கே உங்கள் கருணை தேவை என்றால் அதை உங்களக்குக் கொடையாக கொடுக்க நீங்கள் தயாரா?

நம்மிடம் நாமே அன்பு செலுத்துவது என்ன பெரிய கடினமா என்று கேட்கலாம். நிர்பந்தமில்லாத அன்பையும், கருணையையும் நம்மீது நாம் காண்பிக்க முடியுமா? மிக எளிதாகப் பின்பற்ற என்று கருதும் விசயங்கள் தான் நடை முறையில் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக உள்ளன என்று 'கார்ல் யூங்' கூறுகின்றார். அன்றாட வாழ்கையில் மிகவும் எளிமையாக நடந்து கொள்வதுதான் மிக உயர்ந்த கலை எனலாம்.  

எளிமைக்கான பயணத்தின் முதற்படி நாம் ஒவ்வொருக்குள்ளும் ஒளிந்திருக்கும் மதிப்பீடு செய்பவரை செயல் இழக்கச் செய்வதுதான். அப்போது தான் தன்னைத் தானே ஏற்றுக்கொள்ளும் மனோ பாவம் தோன்றும். இது மனச்சட்சிக்கேற்ப நடந்து கொள்வதில் பிறக்கிறது. கலாச்சாரம், வாழும் சமூக முறைகள் போன்றவை ஏற்படுத்தும் தாக்கத்தையும் சமநிலையுடன் எதிர்கொள்ளப் பழக வேண்டும்.   

இதைச் செய், இதைச் செய்யாதே, செய்தது போதும், இன்னும் அதிகம் செய்ய வேண்டும், வேகமாகச் செய், கடினமாக உழைக்க வேண்டும் என்பது போன்ற சமூக எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தும் தாக்கத்தை நடுநிலையுடன் எதிர்கொள்ளும் பாங்கு நமக்குத் தேவைபடுகிறது. 

உங்கள்  இயல்பு சார்ந்த உள்ளுணர்வை இனங் காண வேண்டும். மூன்றாந்தர கருத்துக்களுக்கு இடம் தராமல், உள்ளொளிப் பயணம் மேற் கொள்ளப் பழகுவது அவசியம். ஜென் துறவி சுசூகி கூறும் போது, மனம் எனும் பத்திரத்தைக் காலியாக வைத்திருந்தால் நிகழ் காலத்தில் வாழ முடியும். புதிய சிந்தனைகள் ஊற்றுப்போல் பெருகும் என்கிறார்.
  

Friday, 15 February 2013

வீட்டிலேயே முகக் கிரீம் தயாரிக்கலாம்


1. பாதாம் பருப்பு பொடி  + கடலை மாவு + பால் 
2. உருளைக் கிழங்கு + தேன் 
3. தக்காளி + பார்லி பவுடர் + சந்தனம் 
4. பப்பாளி + கற்றாழை 
5. ஆவாரம் பூ பொடி + வெண்ணை + பால் 
6. வெள்ளரி விதை பவுடர் + பால் 
7. கடுகு எண்ணெய் + அவரம் பூ பொடி + பச்சை கற்பூர பொடி ( பாதத்திற்கு )

Tuesday, 12 February 2013

சித்தர்கள் பற்றிய தொகுப்பு

பதினெண் சித்தர் வணக்கம்


நந்தியகத்தியர் மூலம் புண்ணாக்கீசர் 
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக் கண்ணர் 
கந்திடைக் காடரும் போகர் புலிக்கை மீசர் 
கருவூரார் கொங்கணவர் மாகாலாங்கி 
சிந்தியழகண்ரகப்பையர் பாம்பாட்டித் 
தேரையரும் குதம்பைச் சட்ட சித்தர் 
செந்தமிழ்ச்சீர் சித்தர் பதினெண்மர் பாதம் 
சிந்தித்தே அணியாகச் சேர்ந்து வாழ்வோம் 

பதினெண் சித்தர்கள் 
1. அகத்தியர் 
2. போகர் 
3. கருவூரார் 
4. புலிப்பாணி 
5. கொங்கணர் 
6. அகப்பேய் சித்தர் 
7. சட்டை முனி 
8. சுந்தரானந்தர் 
9. திருமூலர் 
10. தேரையர் 
11. கோரக்கர் 
12. பாம்பாட்டி சித்தர் 
13. சிவவாக்கியர் 
14. உரோமரிஷி 
15. காகபுசண்டர் 
16. இடைக்காட்டுச்சித்தர் 
17. குதம்பைச்சித்தர் 
18. பதஞ்சலி முனிவர் 

காவேரி தந்த அகத்திய சித்தர் 
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கறியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்ற நூலில் பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.    

தொடரும் .................

Monday, 11 February 2013

படித்ததில் பிடித்தது - உறவுகள் மேம்பட



கிராமப் புறங்களில் சகோதர சகோதிரிகளை 'கூடப் பொறந்ததுக' என்பார்கள். கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் என்பதே  அதன் பொருள். அப்படி ஆனந்தமாய்க் கூடி வாழ்வதற்காக பிறந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் எனும் கேள்வியை ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் நிலவுகிறது.

சின்ன வயதில் தோப்பிலும், வரப்பிலும், குளத்திலும் ஆனந்தமாய் குதித்து விளையாடும் சகோதரர்கள் வளர, வளர தங்களுடைய பிணைப்பை  கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொள்கிறார்கள். இந்த அன்னியோன்யம் முழுமையை மறைந்து போய் பல நேரங்களில் வெறுப்பாய் மாறுவது துயரத்தின் உச்சம்.

சகோதர பாசம் எப்படி இருக்கிறது என இங்கிலாந்தில் ஓர் ஆராய்ச்சி நடத்தினார்கள். அதில் தெரிய  வந்தது   இதுதான்:
        1. மூன்றில் ஒரு பங்கு சகோதரர்கள் தங்கள் கல்லூரிக் காலத்திலும் நெருங்கிய சினேகமாய் இருகிறார்கள் .
         2. இன்னொரு 33 சதவிதம் பேர் நெருக்கமும் இல்லாமல் தூரமும் இல்லாமல் இருக்கிறார்கள்.
          3. மிட்சமுள்ளவர்கள் தொடர்பில்லாமல் இருப்பவர்கள் அல்லது  எதிரிபோலவே முறைத்துக் கொள்பவர்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால் சுமார் 70 சதவிதம் பேர் ஆழமான உறவு இல்லாமல் தான் இருக்கிறார்கள்.

குழந்தைகளாக இருக்கும் போதே வாழ்வின் மதிப்பீடுகள், குடும்ப உறவுகள், அன்பு போன்றவற்றின் தேவையை போதிக்க வேண்டும்.  அத்தகைய செயல்களை ஊக்கப்படுத்த வேண்டும். கணவன், மனைவி இடையே உண்மையான  அன்பும் ஆழமான குடும்ப உறவும் இருந்தால் குழந்தைகளிடமும் அந்த அன்பு இருக்கும் என்கின்றனர் உளவியலார்கள்.

அன்பு சிறக்க நம்பிக்கை ரொம்ப முக்கியம். உறவினர்களுடன் இடையே வலுவான நம்பிக்கை நிலை பெறும் போது பிறர் அந்த உறவை உடைக்க முடியாது. பல சிக்கல்களின் தீர்வு ஒரு சின்ன விட்டுக் கொடுத்தலில் இருக்கிறது. அன்பாய்  நெருங்குவதில் இருக்கிறது. ஒரு சின்ன மன்னிப்பில் இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளும் போது வாழ்கை அழகாகிறது.
       

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை


கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

கூந்தல் வளர

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால்

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

குளிர்ச்சி தரும் குளியலுக்கு

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.


Friday, 8 February 2013

The Science of Astrology - ஜோதிடமும் அறிவியலும்


வானத்தில் உலாவித்திரியும் கோள்கள், மண்ணில் வாழும்  மனிதர்கள் மீது எத்தகைய ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை விவரிப்பதே ஜோதிடம் ஆகும். வானவெளி என்பது, நமது பூமியைச் சுற்றி உள்ள ஒரு மாபெரும் வட்டம் ஆகும். அந்த வட்டத்தை 12 பகுதிகளாக பிரித்து இருக்கிறார்கள். இந்தப் பகுதிகளுக்குத்தான்  ராசிகள் என்று பெயர். ஒரு வட்டம் என்றல் அதற்கு 360 டிகிரிகள் உண்டு . இதனை பாகைகள் என்று சொல்வார்கள். வான மண்டலத்தை 27 சமமான பகுதிகளாக பிரிக்கும்  போது அப்பகுதியை நட்சத்திரம் என்று அழைக்கிறோம்.

தொடரும் ............     

Wednesday, 6 February 2013

கூந்தல் பராமரிப்பு





1.  பொடுகு நீங்க : 
              நல்லெண்ணெய் = 200 மில்லி, வெந்தயம் = 50 கிராம், வால் மிளகு = 25 கிராம், பிஞ்சி கடுக்காய் = 25 கிராம் பொடி செய்த பின்  இவை அனைத்தையும் காய்ச்சி தேய்க்க வேண்டும்.

2. கூந்தல் தைலம்: 
          சுருள் பட்டை = 10 கிராம், பிஞ்சி கடுக்காய் = 10 கிராம், வெந்தயம் = ஒரு  தேக்கரண்டி, படிக சாம்பிராணி = சின்ன துண்டு , செம்பருத்தி பூ = 25 கிராம், ரோஜா பூ = 25 கிராம், நெல்லி பொடி = 10 கிராம், வெட்டி வேர் = கொஞ்சம் 
இவை  அனைத்தையும் 500 மில்லி தேங்காய் எண்ணையில் காய்ச்சி தேய்க்க வேண்டும்.

3.  நரையை தவிர்த்து முடி வளர: 
          மருதாணி, செம்பருத்தி, நெல்லிக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து 150 மில்லி நல்லெண்ணையில் அரைக்க வேண்டும். தலை குளிக்கும் முன் இதனை பூசி வந்தால் நரை முடி வராமல் தடுக்கும் மற்றும் முடி நன்றாக வளரும்.

4. தலைக்கு  தேய்க்கும் எண்ணை: 
           மஞ்சள் கரிசலங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி, கற்றாழை ஜெல், கீழா  நெல்லி ஆகிய வற்றை சமமாக எடுத்து தண்ணீர் விடாமல் அரைத்து வடை போல் தட்டி    தேங்காய் எண்ணையில் காய்ச்ச வேண்டும். பின்பு  தினமும் தலையில் தேக்க பொடுகு நீங்கும்  மற்றும் முடி நன்றாக வளரும்.