Saturday, 2 February 2013

அழகுக் குறிப்புகள்: முகச் சுருக்கம் நீங்க




1. சந்தனப் பொடியுடன் பன்னிர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவவும். இப்படி செய்தல்  நாளடைவில் முகச் சுருக்கம் நீங்கும்.

2. வறண்ட சருமம் உடையவர்கள் வெறும்  காரட்டை  மட்டும் முகத்தில் தேய்த்து வர முகச் சுருக்கம் உண்டாவது தாமதமாகும். அதேபோல் காரட் சாருடன்  தேன் கலந்து தடவி சிறிது நேரம் கழித்து மென்மையான ஈரத்  துணியால் துடைத்து எடுக்க  வேண்டும்.  இவ்வாறு மெல்லிய சுருக்கங்கள் நீங்கும்.

3.  வெங்காயத்தை அரைத்து  அத்துடன் தேன் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தலும் முகச் சுருக்கம் மறையும்.

4. பப்பாளிப்  பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணை சேர்த்து முகத்தில் பூசலாம். முட்டையின் வெள்ளைக் கருவுடன் தேனை கலந்து பூச முகச் சுருக்கம் குறையும். அப்படி செய்யும் போது கண்களை சுற்றி உள்ள பகுதிகளை தவிர்ப்பது நல்லது.

5. வெள்ளரிச் சாருடன் தேன் கலந்து முகத்தில் பூசலாம். பாதாம் பருப்பை பவுடர் ஆக்கி அத்துடன் சோயா மாவு மற்றும் பன்னீர் கலந்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சுருக்கம் நீங்கும்.

6. பாலேட்டுடன் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பதினைந்து நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகம் கழுவ சருமம் மென்மையாகிவிடும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்வது நல்ல பலன் தரும்.

7. கடலை மாவுடன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் மென்மையாக பொலிவுடன் காணப்படும்.

8. ஆரஞ்சு பழச் சாறு, முல்தானி மட்டி, தக்காளி சாறு, பன்னீர் ஆகியவற்றுடன் சந்தனப்பொடி மற்றும் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தில் பொலிவு வரும்.               


No comments:

Post a Comment