Saturday, 2 February 2013

ஆன்மீகச் சிந்தனைகள்


 முழுமையின் பாதையில் முன்னேற விரும்புபவன் ஒருநாளும் வழியில் ஏற்படும் இடர்கள் பற்றிக் குறை கூறலாகாது. ஏனெனில் வாழ்கையில் ஒவ்வொரு இடரும் புதிய முன்னேற்றத்திற்கான  வாய்ப்பாகும். குறை கூறுவது பலவீனத்தின் அறிகுறி, நேர்மையின்மையின் அறிகுறி.
ன்னல்களை முன் கூட் டியே எதிர்ப்பார்க்காதே. இன்னலைக் கடப்பதற்கு அது வழி அல்ல, அது இன்னலை வரவழைக்கவே வழி செய்யும்.
சாதனையில் முன்னேற வேண்டும் என்று நீ விரும்பும் போது, நீ வெல்ல நினைக்கும் இன்னல்கள் பத்து மடங்காகி மேலும்  தீவிரம் அடைவது வழக்கம். பொறுமையாக இரு. விடாமுயற்சியுடன் இரு. அது போதும், இன்னல்கள் தாமே விலகிப்போய்விடும்.

திரும்பத் திரும்ப நான் ஒன்றையே தான் சொல்வேன். அசையாத, அமைதியான நம்பிக்கையும் துணிவும் தான் இன்னல்களைக் கடப்பதர்க்கான ஒரே வழி. இன்னல்களை வெல்வதர்கான வலிமை ஒரு புன்முருவலில் தான் உள்ளது. நெட்டுயிர்ப்பில் அல்ல.

No comments:

Post a Comment