Thursday, 21 February 2013

தாய் மொழி தமிழ் இனம்


கலாச்சார சீர்கேடுகளின் நடுவே மனசாட்சியை சாந்தப் படுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று - இன்று தாய் மொழி தினம். கொஞ்சம் பயமாக இருக்கிறது-- இன்றும் தூய தமிழ் மொழி பேசும் தமிழ் இனத்தை நினைவு கூற நாட்காட்டியில் இன்னும் ஒரு நாள்  குறிக்கப்பட்டுவிடுமோ என்று. வாழ்வியல் முறைகளை சொல்லிக்கொடுத்த பெருமை என்றும் தமிழ் மொழிக்கு உண்டு. ஆனால் இன்று அம்மொழி பேசும் இனத்தாரை அழிக்க ஓர் அரசாங்கமே செயல்பட்டு வருகின்றது மாற்றான் காட்டும் பரிவும் இரக்கமும் முனைப்பும் நம்மில் இல்லாமல் போனது ஏனோ மனதை நெருடுகிறது கொஞ்சகாலமாய்.  இன்னும் எத்தனை கோப்புக் காட்சிகள் தொலைகாட்சியில் அரங்கேறினாலும் நாம் நம்  வேலைகளை தொடர்வோம் வழக்கம் போல்இயந்தரமாக்கப்பட்ட இவ்வுலகில். ஆனால்  எம்தமிழ் இதனை போதித்தது இல்லையே?  என்ன செய்ய  அறம் கூறின தமிழ் இன்று மௌனமாய் இருக்கின்றது கூக்கரிச்சான்  குருவிகளின் கூக்குரலில்.   மௌனம் களைவோம் ...................... 

No comments:

Post a Comment