கிராமப் புறங்களில் சகோதர சகோதிரிகளை 'கூடப் பொறந்ததுக' என்பார்கள். கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் என்பதே அதன் பொருள். அப்படி ஆனந்தமாய்க் கூடி வாழ்வதற்காக பிறந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் எனும் கேள்வியை ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் நிலவுகிறது.
சின்ன வயதில் தோப்பிலும், வரப்பிலும், குளத்திலும் ஆனந்தமாய் குதித்து விளையாடும் சகோதரர்கள் வளர, வளர தங்களுடைய பிணைப்பை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொள்கிறார்கள். இந்த அன்னியோன்யம் முழுமையை மறைந்து போய் பல நேரங்களில் வெறுப்பாய் மாறுவது துயரத்தின் உச்சம்.
சகோதர பாசம் எப்படி இருக்கிறது என இங்கிலாந்தில் ஓர் ஆராய்ச்சி நடத்தினார்கள். அதில் தெரிய வந்தது இதுதான்:
1. மூன்றில் ஒரு பங்கு சகோதரர்கள் தங்கள் கல்லூரிக் காலத்திலும் நெருங்கிய சினேகமாய் இருகிறார்கள் .
2. இன்னொரு 33 சதவிதம் பேர் நெருக்கமும் இல்லாமல் தூரமும் இல்லாமல் இருக்கிறார்கள்.
3. மிட்சமுள்ளவர்கள் தொடர்பில்லாமல் இருப்பவர்கள் அல்லது எதிரிபோலவே முறைத்துக் கொள்பவர்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால் சுமார் 70 சதவிதம் பேர் ஆழமான உறவு இல்லாமல் தான் இருக்கிறார்கள்.
குழந்தைகளாக இருக்கும் போதே வாழ்வின் மதிப்பீடுகள், குடும்ப உறவுகள், அன்பு போன்றவற்றின் தேவையை போதிக்க வேண்டும். அத்தகைய செயல்களை ஊக்கப்படுத்த வேண்டும். கணவன், மனைவி இடையே உண்மையான அன்பும் ஆழமான குடும்ப உறவும் இருந்தால் குழந்தைகளிடமும் அந்த அன்பு இருக்கும் என்கின்றனர் உளவியலார்கள்.
அன்பு சிறக்க நம்பிக்கை ரொம்ப முக்கியம். உறவினர்களுடன் இடையே வலுவான நம்பிக்கை நிலை பெறும் போது பிறர் அந்த உறவை உடைக்க முடியாது. பல சிக்கல்களின் தீர்வு ஒரு சின்ன விட்டுக் கொடுத்தலில் இருக்கிறது. அன்பாய் நெருங்குவதில் இருக்கிறது. ஒரு சின்ன மன்னிப்பில் இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளும் போது வாழ்கை அழகாகிறது.
No comments:
Post a Comment