1. பொடுகு நீங்க :
நல்லெண்ணெய் = 200 மில்லி, வெந்தயம் = 50 கிராம், வால் மிளகு = 25 கிராம், பிஞ்சி கடுக்காய் = 25 கிராம் பொடி செய்த பின் இவை அனைத்தையும் காய்ச்சி தேய்க்க வேண்டும்.
2. கூந்தல் தைலம்:
சுருள் பட்டை = 10 கிராம், பிஞ்சி கடுக்காய் = 10 கிராம், வெந்தயம் = ஒரு தேக்கரண்டி, படிக சாம்பிராணி = சின்ன துண்டு , செம்பருத்தி பூ = 25 கிராம், ரோஜா பூ = 25 கிராம், நெல்லி பொடி = 10 கிராம், வெட்டி வேர் = கொஞ்சம்
இவை அனைத்தையும் 500 மில்லி தேங்காய் எண்ணையில் காய்ச்சி தேய்க்க வேண்டும்.
3. நரையை தவிர்த்து முடி வளர:
மருதாணி, செம்பருத்தி, நெல்லிக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து 150 மில்லி நல்லெண்ணையில் அரைக்க வேண்டும். தலை குளிக்கும் முன் இதனை பூசி வந்தால் நரை முடி வராமல் தடுக்கும் மற்றும் முடி நன்றாக வளரும்.
4. தலைக்கு தேய்க்கும் எண்ணை:
மஞ்சள் கரிசலங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி, கற்றாழை ஜெல், கீழா நெல்லி ஆகிய வற்றை சமமாக எடுத்து தண்ணீர் விடாமல் அரைத்து வடை போல் தட்டி தேங்காய் எண்ணையில் காய்ச்ச வேண்டும். பின்பு தினமும் தலையில் தேக்க பொடுகு நீங்கும் மற்றும் முடி நன்றாக வளரும்.
No comments:
Post a Comment