உனக்குள் மிகவும் ஏழ்மையான பிச்சை எடுப்பவனும் இருக்கிறான். முரடனும் இருந்து கொண்டு அழிவை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறான். உரிய மனவலிமையுடனும், கருணையுடனும் தன்னைத்தானே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளதா என்ற கேள்வியை நம்மை நோக்கி எழுப்புகிறார் உளவியல் வல்லுனர். இது மனித குலத்தின் நேர்மை உணர்வு சார்ந்த சவால்களின் சாரம் என்றும் கூறுகிறார். உங்களுக்கே உங்கள் கருணை தேவை என்றால் அதை உங்களக்குக் கொடையாக கொடுக்க நீங்கள் தயாரா?
நம்மிடம் நாமே அன்பு செலுத்துவது என்ன பெரிய கடினமா என்று கேட்கலாம். நிர்பந்தமில்லாத அன்பையும், கருணையையும் நம்மீது நாம் காண்பிக்க முடியுமா? மிக எளிதாகப் பின்பற்ற என்று கருதும் விசயங்கள் தான் நடை முறையில் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக உள்ளன என்று 'கார்ல் யூங்' கூறுகின்றார். அன்றாட வாழ்கையில் மிகவும் எளிமையாக நடந்து கொள்வதுதான் மிக உயர்ந்த கலை எனலாம்.
எளிமைக்கான பயணத்தின் முதற்படி நாம் ஒவ்வொருக்குள்ளும் ஒளிந்திருக்கும் மதிப்பீடு செய்பவரை செயல் இழக்கச் செய்வதுதான். அப்போது தான் தன்னைத் தானே ஏற்றுக்கொள்ளும் மனோ பாவம் தோன்றும். இது மனச்சட்சிக்கேற்ப நடந்து கொள்வதில் பிறக்கிறது. கலாச்சாரம், வாழும் சமூக முறைகள் போன்றவை ஏற்படுத்தும் தாக்கத்தையும் சமநிலையுடன் எதிர்கொள்ளப் பழக வேண்டும்.
இதைச் செய், இதைச் செய்யாதே, செய்தது போதும், இன்னும் அதிகம் செய்ய வேண்டும், வேகமாகச் செய், கடினமாக உழைக்க வேண்டும் என்பது போன்ற சமூக எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தும் தாக்கத்தை நடுநிலையுடன் எதிர்கொள்ளும் பாங்கு நமக்குத் தேவைபடுகிறது.
உங்கள் இயல்பு சார்ந்த உள்ளுணர்வை இனங் காண வேண்டும். மூன்றாந்தர கருத்துக்களுக்கு இடம் தராமல், உள்ளொளிப் பயணம் மேற் கொள்ளப் பழகுவது அவசியம். ஜென் துறவி சுசூகி கூறும் போது, மனம் எனும் பத்திரத்தைக் காலியாக வைத்திருந்தால் நிகழ் காலத்தில் வாழ முடியும். புதிய சிந்தனைகள் ஊற்றுப்போல் பெருகும் என்கிறார்.
No comments:
Post a Comment